1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , செவ்வாய், 25 ஜூன் 2024 (14:58 IST)

8 மாத பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற தந்தை கைது!

மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் வயது 24. தென்னை மட்டை உரிக்கும் தொழில் செய்து வரும் இவர் ,இதே ஊரைச் சேர்ந்த நாகசக்தி வயது 21. என்பவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
 
இவர்களது இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில்  மகன் கிசான் 8 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு மிதன்யா ஸ்ரீ என,பெயரிட்டு உள்ளனர். காதல் திருமணம் செய்து கொண்டிருந்த தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 
இதே போல்,  கடந்த மூன்று நாட்களுக்கு முன் விக்னேஷ் போதையில் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால், நாக சக்தி  கோபித்துக் கொண்டு அருகே உள்ள அவரது பாட்டி காளியம்மாள் வீட்டில் சென்று தங்கி உள்ளார். 
 
இந்த நிலையில், நேற்று மாலை அங்கு மது போதையில் சென்ற விக்னேஷ் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அச்சமடைந்த நாகசக்தி மகளை தூக்கிக் கொண்டு பக்கத்து 
வீட்டிற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளார்.
 
இதன் காரணமாக மேலும், ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டிற்குள் இருந்த எட்டு மாத பெண் குழந்தை மிதன்யாசிரியை, தூக்கி வந்து  ரோட்டில் வீசியுள்ளார். படுகாயம் அடைந்த குழந்தையை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சோழவந்தான் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்த சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்ல பாண்டியன் குழந்தையின் தந்தை விக்னேசை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி கைது செய்துள்ளார். 
 
பெற்ற குழந்தையை தந்தையே ரோட்டில் வீசி கொன்ற சம்பவம் சோழவந்தான் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.