1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (11:19 IST)

பிரேம்ஜி திருமணத்தை அடுத்து ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் மகள் திருமணம்: குவிந்த பிரபலங்கள்..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜி திருமணம் நேற்று சிறப்பாக நடைபெற்றது அடுத்து ’எதிர்நீச்சல்’ உட்பட பல சீரியல்களை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் மகளின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில்  சின்னத்திரை மற்றும் பெரிய திரையைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
‘எதிர்நீச்சல்’ சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மகள் அபிநயா திருமணம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தில் எதிர்நீச்சல் சீரியலில் கலந்து கொண்ட நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
மேலும் அபிநயாவின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் நேரில் வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சன் டிவியில் கடந்த வாரம் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது என்பது இதனை அடுத்து திருமண பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் அவர் தனது அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva