1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (16:29 IST)

யார் இந்த சந்தியா? பாலகிருஷ்ணனிடம் சிக்கியது எப்படி? பதற வைக்கும் பின்னணி

சென்னை ஜாபர்கான்பேட்டையில் எஸ்ஆர் பாலகிருஷ்ணன் மனைவி சந்தியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். பாலகிருஷ்ணனுக்கு சந்தியாவின் நடந்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
எனவே, சந்தியாவை கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். பெருகுடி குப்பை மேட்டில் கிடைத்த கைகளில் பச்சை குத்தப்பட்டிருந்ததை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி பால கிருஷ்ணனனை கைது செய்தனர்.
 
தற்போது சந்தியாவை பற்றிய சில செய்திகளை சந்தியாவின் உறவினர் வெளியிட்டுள்ளனர். அவை பின்வருமாறு, சந்தியாவுக்கு, உதயன் என்ற அண்ணனும், சஜிதா என்ற தங்கையும் உள்ளனர். 
 
அண்ணன் கேரளாவில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று வருகிறார். சஜிதா திருமணம் ஆகி தென்தாமரைகுளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தியாவின் பெற்றோர் ஞாலத்தில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார்கள்.
சந்தியா சிறு வயதிலேயே அழகாக இருப்பார். குடும்ப வறுமை காரணமாக 7 ஆம் வகுப்புடன் சந்தியா படிப்பை நிறுத்தி கொண்டார். அதன்பின்னர் பெண் தரகர் இருவர் மூலம் பாலகிருஷ்ணன் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். 
 
முதலில் திருமணத்திற்கு மறுத்த சந்தியா பின்னர் குடும்ப சூழ்நிலையை கருது திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். சந்தியாவுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் 15 வயது வித்தியாசமாம். 
 
சந்தியா குழந்தைகளுடன் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசித்து வந்தார். சந்தியாவுக்கு மாயவரதன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் மட்டும் சென்னையில் வசித்து வந்துள்ளார். 
 
சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவர் என்பதாலும் சந்தியா மீது அடிக்கடி பாலகிருஷ்ணன் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் இதுபோன்று கொடூர கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறையுள்ளனர்.