வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 ஜூன் 2018 (11:26 IST)

ரூ.2000 நோட்டின் கலர்ஜெராக்ஸ்: கோவையில் ரூ.84 லட்சம் பறிமுதல்

கோவையில் ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து பொதுமக்களிடம் புழக்கத்தில் விட்ட கள்ளநோட்டு கும்பல் ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.84 லட்சம் கள்ளநோட்டு கைப்பற்றப்பட்டுள்ளது
 
கோவையில் நேற்றுமுன் தினம் போலீசார் இரவில் வாகன சோதனை நடத்தியபோது ஆனந்தன் என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் நான்கு ரூ.2000 கட்டுக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து ஆனந்தனிடம் போலீசார் விசாரணை செய்தபோது தனியார் நிறுவனம் ஒன்றின் கலெக்சன் ஏஜண்டாக ஆனந்தன் பணிபுரிந்து வருவதாகவும் அதோடு ரூ.2000 நோட்டை கலர்ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வருவதும் தெரியவந்தது.
 
ஏற்கனவே ஆனாந்தன் மீது  இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக வழக்குகள் பல உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஆனந்தன் பயன்படுத்திய கலர் ஜெராஆக்ஸ் இயந்திரம் மற்றும் ரூ.84 லட்சம் மதிப்புள்ள ரு.20000 கட்டுக்கள் 42ஐயும் போலீசார் பறிமுதல் செய்தானர். மேலும் ஆனந்தனுக்கு உதவியாக இருந்த மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.