புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 30 நவம்பர் 2025 (13:31 IST)

SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
SIR படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகம் உள்பட சில மாநிலங்களில் தற்போது வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படிவங்களை டிசம்பர் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 
ஆனால், தற்போது மழை உள்பட பல்வேறு காரணங்களால் பூர்த்தி செய்யப்பட்ட SIR  படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16ஆம் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva