காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்: மத்திய அரசு புதிய அறிவிப்பு!
காலாவதி தேதியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி மருந்தை மாற்றிக் கொடுக்க மாநில அரசுகளுக்கு தடையில்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல்.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,561 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,45,160 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே தற்போது நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பிப்ரவரி அல்லது மார்ச் இறுதியில் காலாவதியாகும் நிலையில் உள்ளது. காலாவதியாகும் கோவிஷீல்ட் மருந்துகளை திரும்ப பெற வேண்டும் என இந்திய மருத்துவ கழகம் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான பேச்சுக்கே இடமில்லை என சீரம் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இதனால் காலாவதி தேதியை நெருங்கும் கொரோனா தடுப்பூசி மருந்தை மாற்றிக் கொடுக்க மாநில அரசுகளுக்கு தடையில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. தனியார் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி மருந்து காலாவதி தேதியை நெருங்கியதால் மத்திய சுகாதாரத்துறை இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வீணாகப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.