1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 29 மே 2024 (16:15 IST)

காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள்.! விற்பனைக்கு அனுப்பிய ஆவின் நிர்வாகம் - பரபரப்பு புகார்...!

Expired
ஈரோடு மாவட்ட ஆவினில் இருந்து காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்ட சம்பவம் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
 
ஈரோடு மாவட்ட ஆவின் மூலம், நாள்தோறும் 2.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈரோடு ஆவினில் இருந்து கோபி பேருந்து நிலையம் மற்றும் கொடிவேரி பகுதியில் இயங்கும் ஆவின் பாலகங்களுக்கு நேற்று ஆவின் பிஸ்கெட் பாக்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
 
இந்த பிஸ்கெட்டுகள் அனைத்தும் காலாவதியானவை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்  ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காலாவதியான ஆவின் பிஸ்கெட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதை கண்டறிந்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே ஈரோடு ஆவின் நிர்வாகம், கிடங்குகளில் வைத்திருந்த காலாவதியான 6 டன் பிஸ்கெட் பாக்கெட்டுகளை, வேறு இடத்துக்கு மாற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசின் தயாரிப்பான ஆவின் பொருட்கள் தரமானதாக இருக்கும் என்று நம்பி வாங்கும் பொதுமக்களை திட்டமிட்டு ஆவின் நிர்வாகம் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.