1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 29 மே 2024 (15:52 IST)

குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்.! டெல்லி அரசு அதிரடி உத்தரவு..!

Delhi Water
டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தண்ணீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

தற்போது டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மேலும் அரியானா மாநிலம் டெல்லிக்கு திறந்து விடும் தண்ணீரை நிறுத்தியுள்ளது. இதனால் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி மாநில அரசு தொடர்ந்து அரியானா மாநிலத்திடம் தண்ணீர் திறந்து விடக்கோரி வலியுறுத்தி வருகிறது. என்றபோதிலும் அரியானா அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.
 
இதனால் டெல்லி மக்கள் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என்றும் தங்கள் கார்களை தண்ணீர் குழாய்களால் கழுவ வேண்டாம் என்றும்  மோட்டார்களால் தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும் என்றும் டெல்லி அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் தண்ணீரை வீணாக்கினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி அரசு இன்று அறிவித்துள்ளது.