தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா! பெரும் பரபரப்பு
தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக பெண் ஊழியருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் அதில் பெரும்பாலும் சென்னை சேர்ந்தவர்களாக இருப்பதால் சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது
இந்த நிலையில் சென்னையில் தற்போது அலுவலகங்கள் ஓரளவுக்கு இயங்கத் தொடங்கிய நிலையில் அலுவலக ஊழியர்களுக்கும் கொரோனா பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நேற்று தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததாக வெளிவந்துள்ள செய்தியால் தலைமைச் செயலக ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதனையடுத்து தற்போது தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேர்வுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே தேர்வு துறை உதவி இயக்குனர் ஒருவருக்கு கொரோனா தோற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் ஊழியருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து தேர்வுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து தேர்வுத்துறை ஊழியர்களுக்கும் விரைவில் கொரோனா பரிசோதனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது