புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (10:08 IST)

வைஃபை ஏடிஎம் கார்டுகளை வைத்து கொள்ளை அடித்த வங்கி ஊழியர்! உஷார் மக்களே!!

சென்னையில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி போலி ஆவணங்களை கொடுத்து ஸ்வைப்பிங் மெஷின் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார் வங்கி ஊழியர் ஒருவர்.

சென்னை போரூரைச் சேர்ந்த ஹரி விஸ்வநாதன் என்பவர் அளித்த போலிஸ் புகாரில் தனது ஏடிஎம் கார்டு திருடப்பட்டு அதில் இருந்து 70,000 ரூபாய் திருடப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து போலிசார் நடத்திய விசாரணையில் பணம் எடுக்கப்பட்ட ஸ்வைப்பிங் மெஷினின் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதைப் பயன்படுத்திய சரவணன் என்ற முன்னாள் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

இவர் ஏடிஎம் மையங்களிலும் வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் விட்டுச் செல்லும் வைஃபை வசதியுள்ள டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை இது போல மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை செய்ததில் இதுபோல 6 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.