புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (17:06 IST)

இந்தியன் வங்கியிலும் இந்தி திணிப்பா? அடுத்த சர்ச்சை கிளம்பியது!

இந்தியன் வங்கி ஏடிஎம் ரசீதில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் மட்டுமே இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

சமீபத்தில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் இந்தி தெரியாததால் வங்கிக் கடன் வழங்க முடியாது என அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் வேறு கிளைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இப்போது உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் இந்தியன் வங்கி ஏ.டி.எம் ரசீதில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகள் மட்டுமே இருந்ததால் சர்ச்சைக் கிளம்பியுள்லது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.