1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

டூவிலரில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்: மடக்கிபிடித்த பொதுமக்கள்!

டூவிலரில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்:
சென்னையில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றவர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை வேளச்சேரியில் முகவர்கள் என்ற அடையாள அட்டை அணிந்து வந்த 2 பேர் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர் 
 
காவல்துறையினர் அந்த இருவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தேர்தல் அலுவலர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணையில் தவறு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முயற்சிகள் பெற்றதாகவும் அதன் காரணமாகத்தான் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றஞ்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது