3 மாநிலங்களில் முடிந்தது வாக்குப்பதிவு: தமிழகத்தில் தான் குறைவான வாக்குசதவிகிதம்!

vote
3 மாநிலங்களில் முடிந்தது வாக்குப்பதிவு
siva| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (19:33 IST)
தமிழகம் புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சற்று முன் மூன்று மாநிலங்களிலும் வாக்குப் பதிவு முடிவடைந்தது
இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் பணிகளில் தற்போது தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மூன்று மாநிலங்களிலும் மாலை 6 மணி வரை பதிவான வாக்குகள் சதவீதம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

தமிழகதில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் புதுவையில் மாலை 6 மணி நிலவரப்படி 78.03% வாக்குகள் பதிவாகி உள்ளது

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் கேரளாவில் மாலை 6 மணி நிலவரப்படி 71.31% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக புதுச்சேரியிலும் குறைந்தபட்சமாக தமிழகத்தில்தான் வாக்குப்பதிவு அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :