1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (21:56 IST)

விஜய் அரசியலுக்கு வரக்கூடாது.. அவருக்கு அது ஒத்துவராது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அரசியல் அவருக்கு ஒத்து வராது என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் முதல் மாநாடு விரைவில் சேலத்தில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் ரசிகர்கள் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக என எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். இப்போது அவர் திடீரென கட்சி ஆரம்பித்தால் அவர் தன்னை சுற்றி ஒரு குறுகிய வட்டம் போட்டது போல் ஆகிவிடும்

எனவே விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவருக்கு அரசியல் ஒத்து வராது என்றும் விஜய் ஒரு நல்ல நடிகர், நல்ல நடனம் ஆடுபவர், அவர் அதில் கவனம் செலுத்தினால் இன்னும் பெரிய அளவில் வரலாம் என்று ஒரு தந்தை ஸ்தானத்திலிருந்து நான் அவருக்கு அறிவுரை கூறுகிறேன் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva