திங்கள், 15 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (14:59 IST)

தேர்தலுக்குப் பின் மோடி இந்தியாவை விட்டே வெளியேறி விடுவார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

வரும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் பிரதமர் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி விடுவார் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார் 
 
சென்னை ராயப்பேட்டையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒவ்வொரு முறை தமிழ்நாடு வரும் பேதும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு வேறு விதமாக இருக்கும் என்றும் மோடியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற ஒற்றைக் கருத்துக் கொண்ட கட்சியாக திமுக மற்றும் காங்கிரஸ் இருப்பதாகவும் வரும் தேர்தலுக்கு பின்னால் பிரதமர் மோடி இந்தியாவை விட்டு வெளியேறி ஆப்பிரிக்காவுக்கு சென்று விடுவார் என்றும் தெரிவித்தார் 
 
திமுக காங்கிரஸ் கூட்டணி ஐந்து முறை தேர்தலை சந்தித்துள்ளது என்றும் காமராஜர் காலத்தில் உள்ள காங்கிரஸ் தற்போது இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி தற்போது ஓரளவுக்கு பலமாக உள்ளது என்றும் எனவே காங்கிரஸ் கட்சியின் பலத்தை அறிந்து திமுக தொகுதிகளை ஒதுக்கி கொடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran