1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (14:52 IST)

கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா.. முதல்வர் ஸ்டாலின் - ரஜினிகாந்த் பங்கேற்பு..!

rajinikanth-mk stalin
கலைஞர் என்னும் தாய் என்ற நூல் வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அமைச்சர் ஏவ வேலு எழுதியிருக்கும் நூல் கலைஞர் என்னும் தாய். இந்த நூல் நாளை வெளியிட இருக்கும் நிலையில் இந்த நூலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நாளை மாலை 6:00 மணிக்கு நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் இந்த நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட இருப்பதாகவும் அதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்து ராம் உள்பட சில மூத்த பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நூல் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருப்பதாவது:

குறளோவியம் தீட்டிய முத்தமிழறிஞர் கலைஞருக்கு எழுத்தோவியம் தீட்டியிருக்கிறார் அருமைச் சகோதரர் எ.வ.வேலு. கலைஞரால் `எதிலும் வல்லவர்' எனப் போற்றப்பட்டவர் எ.வ.வேலு. எழுத்திலும் வல்லவர் என்பதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில், இந்த நூலை எழுதியிருக்கிறார்

Edited by Siva