1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (12:59 IST)

புழல் சிறையில் இருந்து தப்பியோடிய பெண் கைதி பெங்களூரில் கைது: அதிரடி தகவல்..!

சென்னை புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் 2 பெண் வார்டன்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தப்பியோடிய கைதியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து தப்பி சென்ற பெண் கைதி ஜெயந்தியை பெங்களூர் விமானநிலையம் அருகே போலீசார் கைது செய்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 சென்னையில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெண் குற்றவாளி ஜெயந்தி என்பவர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறைக்காவலர்கள் இருவர், பார்வையாளர்கள் அறையைச் சுத்தம் செய்ய வேண்டி, ஜெயந்தியை அழைத்துச் சென்றபோது சுத்தம் செய்து கொண்டிருந்த ஜெயந்தி, போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பியோடினனார்.
 
இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனிப்படை அமைத்து கைதி ஜெயந்தியை தேடி வந்த நிலையில் தற்போது அவர் பெங்களூரில் பிடிபட்டார்.
 
Edited by Mahendran