1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 டிசம்பர் 2023 (17:58 IST)

சிறையில் சட்டம் பயின்றி தனக்கு தானே வாதாடி விடுதலையான இளைஞர்.. உபியில் ஒரு ஆச்சரியம்..!

12 ஆண்டுகள் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்ற ஒருவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து சட்டம் பயின்று தனக்குத்தானே வாதாடி விடுதலையான ஆச்சரியமான சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் அமித் சவுத்ரி என்ற இளைஞர் குற்றம் சாட்டப்பட்டார். அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருந்த அவர் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து சட்டம் பயின்றார். அதன் பின்னர் தனக்குத்தானே அவர் மேல்முறையீடு செய்து வாதாடி தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபித்து விடுதலை ஆகியுள்ளார்.
 
இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஜாமினில் வெளிய வந்து அவர் சட்டம் படித்து உள்ளார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva