ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (13:30 IST)

ஈரோடு இடைத்தேர்தல்; வாக்குப்பதிவு நேரம் குறைப்பு! – மேலும் சில தகவல்கள்!

Election
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் தொடங்கியுள்ள நிலைடில் வாக்குப்பதிவு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா கடந்த 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்காஅ வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 தொடங்கி பிப்ரவரி 7 வரை நடைபெறுகிறது. 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 10ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் ஒருபக்கம் வேட்பாளரை அறிவித்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவி பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் 350 வாக்குச்சாவடிகள் அமைத்து தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கொரோனா பரவல் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டிருந்தது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனா பாதித்து மீண்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்திருப்பதால் கூடுதல் நேரத்தை நீக்கி வழக்கமான காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்திலேயே தேர்தலை நடத்தலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.