1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 2 ஏப்ரல் 2023 (17:55 IST)

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரலாம்: எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஒரு சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் தமிழகத்திற்கும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். 
 
மேலும் அதிமுகவை யாராலும் தொட முடியாது என்றும் அதிமுகவினரை வழக்குகள் போட்டு அச்சுறுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை சீண்டி பார்ப்பவர்கள் அழிந்து போவார்கள் என்றும் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva