1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 25 அக்டோபர் 2023 (07:58 IST)

நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல.. ஆரியம், திராவிடம் கேள்விக்கு ஈபிஎஸ் பதில்..!

கடந்த பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆரியம் திராவிடம் என்று பேசி வருகிறது என்பதும் ஆரியத்தை ஒழிப்போம் திராவிடத்தை வளர்ப்போம் என்று முழங்கி வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் ஆரியம் திராவிடம் குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் கேட்டபோது இது குறித்து ஆய்வாளர்கள் தான் பேச வேண்டும் என்றும், எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றும், நான் அதை எல்லாம் படிக்க வில்லை என்றும் கூறினார்.  
 
ஆரியம் திராவிடம் இருக்கிறதா இல்லையா என அறிஞர்கள் தான் கூற வேண்டும் என்றும் நான் அந்த அளவுக்கு படித்தவன் இல்லை என்றும்  இந்த கேள்வியை நீங்கள் யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
ஆரியம் திராவிடம் குறித்து சமீபத்தில் ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அது குறித்து கேள்வியை புத்திசாலித்தனமாக தவிர்த்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva