எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை நடப்பது இயல்புதான் - எடப்பாடி அடடே விளக்கம்
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ள கருத்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, கே.என்.நேருவின் தம்பியான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி “ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அது தொடர்பான பல ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். எந்த ஆட்சியாக இருந்தாலும் கொலை, கொள்ளை ஆகியவை நடப்பது இயல்புதான். அந்த குற்றங்களுக்கு எப்படி தீர்வு காண்கிறோம் என்பதில்தான் அரசின் நடவடிக்கை இருக்கிறது.
திமுக ஆட்சியில் எத்தனை கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றது என்னால் கூறமுடியும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு அமைதி நிலவுகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவுதான்” என கூறினார்.
கொலை, கொள்ளை சம்பவங்கள் இயல்புதான் என ஒரு மாநிலத்தின் முதல்வர் சாதரணமாக கூறியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.