1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 ஜூன் 2022 (13:48 IST)

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தேதி, விண்ணப்ப தேதி அறிவிப்பு!

பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி, விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் மூலமாக மட்டுமே பொதுத்தேர்வு நடந்த நிலையில் நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பொறியியல் கலந்தாய்வுக்கான தேதியை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அதன்படி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16ம் தேதி தொடங்குகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 22ம் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு மாணவர்கள் ஜூன் 20ம் தேதியிலிருந்து ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.