ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (16:39 IST)

பொறியியல் சேர்க்கை: மே 3-ம் தேதி ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பொறியியல் படிப்புக்காக விண்ணப்பிக்க மே 3-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் உ‌ள்ள பொறியியல் கல்லூரிக‌ளி‌ல், அரசு ஒதுக்கீட்டில் இருக்கும் காலி இடங்களை நிரப்ப மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இது தொடர்பாக அமைச்சர் அன்பழகன் கூறியிருப்பதாவது:-
 
“இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான வேலைகள் தொடங்கும். இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ல் தெரியும்.
 
பொறியியல் படிப்புக்காக இணையதளங்களில் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வரும் 29ம் தேதி வெளியிடப்படும். மே 3 முதல் இணையதளங்களில் கலந்தாய்வு விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவு செய்வதற்கு மே 30 கடைசி நாள். தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக 42 மையங்கள் திறக்கப்படும். ஆன்லைன் விண்ணப்பத்திற்காக ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப தேவையில்லை” என்று தெரிவித்தார்.