1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2019 (11:30 IST)

அகழியில் சறுக்கி விழுந்த யானை: மனதை உடைக்கும் கோர புகைப்படம்!

பொள்ளாச்சியில் அகழியை கடக்க முயன்ற போது தவறி விழுந்து ஆண் யானை ஒன்று மரணித்த புகைப்படம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை ஓடியுள்ள சரளப்தி கிராமத்தில் அகழி ஒன்று உள்ளது. இந்த அகழியில் ஆண் யானை ஒன்று விழுந்து மரணமடைந்து கஇருந்தது ஊர்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இதன் பின்னர் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு யானையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 வயதாகும் அந்த யானை அகழியை கடக்க முயன்ற போது மழையின் காரணமாக சறுக்கி விழுந்திருக்கும் என கூறப்படுகிறது. 
மரணித்த யானைக்கு தலை மற்றும் மார்பு பகுதியில் பகத்த அடிப்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கல் சில வெளியாகி பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.