1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2024 (13:19 IST)

வாக்குப்பதிவு மந்தமாகுமா? 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு போக வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதும் அதனால் சென்னையில் உள்ள தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வாக்குப்பதிவு மந்தமாகும் என்று கூறப்படுகிறது.

சனி ஞாயிறு ஒட்டிய நாட்களில் தேர்தல் வைத்தால் தேர்தலில் வாக்கு செலுத்துவதை விட சொந்த ஊருக்கு சென்று விடுமுறையை கழிக்கலாம் என்று செல்பவர்களை எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது என்பதை கடந்த காலங்களில் நடந்த தேர்தலின் போது கிடைத்த அனுபவமாக இருந்தது.

சென்னையில் குடியிருக்கும் பலருக்கு சென்னையில் வாக்குகள் இருந்தபோதிலும் வாக்குப்பதிவிற்காக அளித்த விடுமுறையை சொந்த ஊருக்கு செல்ல பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறைதான் அதிகரித்து வருகிறது.

எனவே தான் இடைப்பட்ட நாட்களில் தேர்தல் தேதி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் வரும் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை என்பதால் வெள்ளி சனி ஞாயிறு என மூன்று நாள் விடுமுறையை அனுபவிக்க சொந்த ஊருக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அதனால் மந்தமான வாக்குப்பதிவு தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva