செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2024 (10:25 IST)

காங்கிரஸ், பாஜக இரண்டுமே எங்களை அழைப்பதில்லை: அகிலேஷ் யாதவ் அதிருப்தி..!

akilesh
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே எங்களை அழைப்பதில்லை என சமாஜ்வாடி ஜனதா கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் உத்தர பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் ராகுல் காந்தி சமீபத்தில் தனது இரண்டாம் கட்ட பாதை யாத்திரையை மணிப்பூரிலிருந்து தொடங்கிய நிலையில் இந்த பாதை யாத்திரைக்கும் அகிலேஷ் யாதவ்வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை 

 
இந்த நிலையில்  காங்கிரஸ் பாஜக இரண்டுமே அவர்களது கட்சி நிகழ்வுகளுக்கு எங்களை அழைப்பதில்லை என்றும் குறிப்பாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடை பயணத்தில் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் நாங்கள் அதில் பங்கேற்க பங்கேற்க போவதில்லை என்று சமாதிவாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனிப்பெரும் சக்தியாக இருக்கும் அகிலேஷ் யாதவை பாஜக காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் அழைப்பு விடுக்காதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran