1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (15:09 IST)

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில்...?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன. 

 
சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இந்த தேர்தலை 2 கட்டமாக தமிழகம் முழுவதும் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 
 
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
 
பொங்கல் முடிந்த உடன் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.