வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 டிசம்பர் 2021 (16:12 IST)

இந்திய திரைப்படங்களை பிரித்துப் பார்க்க வேண்டாம் - தனுஷ்

இந்திய திரைப்படங்களை வடக்கு , தெற்கு எனப் பிரிப்பதை நான் எப்போதும் எதிர்க்கிறேன் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி இயக்குநர் எல்.ராய் இயக்கத்தில், அக்‌ஷய்குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் அந்தரங்கி ரே.

இப்படத்தை கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும்  கலர் எல்லோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்பட்த்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.அர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு 'கலாட்டா கல்யாணம்' எனப் பெயரிட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்ப்படும் இப்படம் வரும் 24 ஆம் தேதி கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமேசான் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரமோஷ நிகழ்ச்சி இன்று மும்பையில் நடந்தது. இதில்;  கலந்துகொண்டு பேசிய நடிகர் தனுஷ்,  இந்திய சினிமாவை வடக்கு ,.  தெற்கு எனப்  பிரித்துப் பார்க்க வேண்டாம் ; அதை நான் எதிர்க்கிறேன். அனைத்துமே இந்திய படங்கள் எனத் தெரிவித்துள்ளார்.