1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2018 (19:43 IST)

எடப்பாடி ஆட்சியில் அடுத்த சின்னம்மா யார் தெரியுமா?

ஜெயலலிதா இருந்த போது அவருக்கு எப்படி சசிகலா இருந்தாரோ அதே போல தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு இளங்கோவன் என்பவர் இருக்கிறாராம். அமைச்சர்கள் மத்தியில் இளங்கோவன் பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கிறதாம்.
 
எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராக இருந்தபோதே இளங்கோவன் அவருக்கு நிழலாக செயல்பட்டு வந்தார். எடப்பாடியின் வரவு செலவு கணக்கு எல்லாம் இளங்கோவன் தான் கவனித்து வந்தாராம்.
 
எடப்பாடிக்கு யாரவது பேச வேண்டும் என்றால் முதலில் இளங்கோவனுக்கு போன் செய்து அவர் எங்கு இருக்கிறார், தற்போது பேச முடியுமா என கேட்பார்களாம் அந்த அளவுக்கு எடப்பாடியிடம் செல்வாக்கு பெற்றவர் இளங்கோவன்.
 
எடப்பாடியின் சமுதாயத்தை சேர்ந்த இளங்கோவன் சேலம் கிழக்கு மாவட்டத்தில் எடப்பாடியின் செல்வாக்கை வளர்க்க அவரால் வளர்க்கப்பட்டவர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் எடப்பாடி தான் அடுத்த முதல்வர் என இளங்கோவன் வெளிப்படையாகவே கூறி வந்துள்ளார். அதற்கான காய்நகர்த்தல்களை இளங்கோவனே செய்ததாக கூறப்படுகிறது.
 
தற்போது எடப்பாடி முதல்வர் ஆன பின்னர் இளங்கோவன் எந்நேரமும் முதல்வர் அலுவலகத்திலேயே இருக்கிறாராம். முதல்வரை யார் பார்க்கவேண்டுமானாலும் அதற்கு இளங்கோவன் மனசு வைக்க வேண்டுமாம். முதல்வரும் எதற்கெடுத்தாலும் இளங்கோவனை போய் பாருங்க, இளங்கோவனை கேட்டுக்கோங்க என கூறுகிறாராம்.
 
சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர் சரோஜா தனது துறை சம்மந்தமாக முதல்வரை சந்திக்க வந்துள்ளார். அப்போது முதல்வர் இது சம்மந்தமாக இளங்கோவனை பாருங்க என கூற அமைச்சர் கோபமடைந்து, நான் ஏன் அவரை போய் பார்க்க வேண்டும், என் துறைக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம், என்னால் அவரை எல்லாம் பார்க்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.
 
அதே நேரத்தில் இளங்கோவன் அமைச்சர்களை அசால்டாக டீல் செய்வதாக கூறப்படுகிறது. அமைச்சர்களை பெயரை சொல்லி கூப்பிடாமல் அவர்களது துறைகளை கூறி தான் கூப்பிடுவாராம். ஒரு முறை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஒரு ஃபைலை நீட்டி ஹெல்து இத சீக்கிரமா முடிச்சிடுங்க என கூறியுள்ளார்.
 
இதனால் கடும் கோபமடைந்த விஜயபாஸ்கர், என்னது ஹெல்தா? எனக்கு பேரு இல்ல? பேரை சொல்லி கூப்பிடுங்க, இல்ல சார்னு கூப்பிடுங்க, நான் என்ன நீங்க வச்ச ஆளா, உங்க உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்கிட்ட ஆகாது என திட்டி தீர்த்துவிட்டாராம். அதே போல போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் இளங்கோவன் வாங்கிக்கட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இளங்கோவன், ஜெயலலிதாவுக்கு சசிகலா இருந்தது போல எடப்பாடிக்கு உருவாகி வருகிறார். இப்படியே போனால் சசிகலாவை சின்னம்மா என கூறி மரியாதை அளித்ததை போல இளங்கோவனுக்கு அளிக்க வேண்டி வரும் இதனை தொடக்கத்திலேயே கட் செய்துவிட வேண்டும் என அமைச்சர்கள் பேசிக்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் எடப்பாடியின் காதுக்கு போயும் அவர் கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது.