திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2020 (17:00 IST)

40 சதவீதத்துக்கு மேல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த தகவல் இன்னும் அரசிடம் இருந்து வெளிவர வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மத்திய கல்வித்துறை செயலாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கூறியது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று அவ்வப்போது தமிழக அரசும் தெரிவித்து வருகிறது
 
இருப்பினும் தற்போது ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது 
 
இருப்பினும் ஒருசில தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணங்களை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை தற்போது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 40 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இதுகுறித்து உத்தரவு ஒன்றை அனுப்பி அனுப்பி உள்ளது. 40 சதவீதத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கையை செப்டம்பர் 3ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது