செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:20 IST)

இன்று விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை உட்பட மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் சனிக்கிழமை வேலை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளி இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  

ஏற்கனவே ஒரு சில நாட்கள் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran