திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2023 (07:36 IST)

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று கனமழை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தஞ்சை, ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

சென்னை மாவட்டத்திற்கு இதுவரை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை  என்றாலும் சென்னையில் மழை பெய்து கொண்டிருப்பதால் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் இதுவரை 8 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva