புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2023 (16:48 IST)

கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டும் அடாவடி அரசு - எடப்பாடி பழனிசாமி

இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது  என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தமிழகம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும்  அரசின் டாஸ்மாக் கடைகள் இருக்கும் நிலையில் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் புதிதாக மது வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு  நேற்று திறந்துவைக்கப்பட்டது.

ஏடிஎம் மெஷின் போலவே இருக்கும் இந்த இயந்திரத்தில் தேவையான மதுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவினர் உள்ளிட்டோர்   கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது.

கொலைக்களமாக மாறிவரும் தமிழகத்தில், மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்’’ என்று  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.