வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 மே 2020 (15:07 IST)

ஆர்.எஸ்.பாரதி கைது ஏன்? முதல்வர் பழனிசாமி விளக்கம்!

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம். 
 
இன்று காலை சென்னையில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன ஆர்.எஸ்.பாரதி ஆஜர்படுத்தினர். அங்கு ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. 
 
கைது செய்யப்பட்ட போது கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆர்.எஸ்.பாரதி கூறினார். 
 
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர் கூறியதாவது, பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததாலே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. 
 
ஆர்.எஸ்.பாரதி இழிவாக பேசிய போதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக அரசின் மீது ஸ்டாலின் புகார் கூறுவது கண்டிக்கதக்கது.
 
பத்திரிக்கை விளம்பரத்திற்காக ஏதோ விஞ்ஞானி போல ஆர்.எஸ்.பாரதி புகார்களை கொடுக்கிறார். அரசின் இ டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூறுவது பொய் என தெரிவித்துள்ளார்.