செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (19:31 IST)

திமுக அரசு செய்வது காலம் தாழ்ந்த நடவடிக்கைகள்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மழைநீர் குறித்து திமுக அரசு காலம் கடந்து நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் கனமழை பெய்யும் என்று தெரிந்திருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு காலம் தாழ்ந்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் சென்னை உள்பட பல நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்பட்டதால் தான் தற்போது மழைநீர் ஒரே நாளில் வடிந்து வருகிறது என்பதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை குறை சொல்வதை நிறுத்திவிட்டு அந்த திட்டத்தை மேலும் தொடர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்