செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (13:07 IST)

பழனிச்சாமி அரசின் ஒரு விரல் புரட்சி

இன்றே பேசிக் கொள்ளுங்கள் ! அடுத்த ஆண்டு நிச்சயம் பேசமுடியாது !
நேற்றே பேசிக் கொள்ளுங்கள் ! அதுவும் தாமதம் தான்  !



தோழர் திருமுருகன் கவலைக்கிடம் ! உறக்கம் இல்லை ! இது யாருடைய அரசாங்கம் ? இந்த அரசு தனது வீரத்தை கருணாசிடமும், திருமுருகன் காந்தியிடமும் தான் காட்டும். இது ஹெச் ராஜாவையும், ஸ் வி சேகரையும்  ஒன்றும் செய்யாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்த மந்திரிகள்  கருணாசும்  ஹெச் ராஜாவும் சமம் இல்லை என்கிறார்கள். இதில் ஒரு சிரிப்பு மந்திரி, மதுரைக்கு எய்ட்ஸ் மருத்துவமனை  வரும் என்கிறார். மதுரைக்கு வந்த சோதனை.

இதன் உச்சக்கட்டம் தான் சே குவாராவும்,  பிடல் காஸ்ட்ரோவும்.  எப்படி சற்றும்  வாய்  கூசாமல் பேசுகிறார்களோ தெரியவில்லை ? சே குவாராவும்,  பிடல் காஸ்ட்ரோவும் குட்காவில் ஊழல் செய்தார்களா ? தனது சம்மத்திகளுக்கு காண்ட்ராக்ட் கொடுத்தார்களா ? சேகர் ரெட்டிக்களிடம் தொழில் முறை ஒப்பந்தம் செய்து கொண்டார்களா ? ஊமைகள் தேசத்தில் மக்கள் காதுகளை மூடிக் கொள்ள வேண்டுமா ? வீரனைப்போரிலும், மனைவியை வறுமையிலும், நண்பனை கஷ்டக்காலத்திலும் தெரிந்துக் கொள்வதைப்போல,  இந்த அமைச்சர்களை ஜெயலலிதா இல்லாதப்  போது   தெரிந்துக் கொள்ளலாம் போல !  இறைவன் தூணிலும், துரும்பிலும் இருக்கிறானோ இல்லைய்யோ தெரியவில்லை. எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ?? எங்கெல்லாம் ரைடு  நடக்கிறதோ? அங்கெல்லாம் தூணாகவும், துரும்பாகவும்  அமைச்சர்கள்  இருக்கிறார். ஒரு செடியில் இலைகள் இல்லை என்றாலும் பரவ இல்லை. மலர்ந்த அத்தனை மலர்களும், மாந்தம் ஆன மர்மம் தான் என்னவோ ?

ஒரு வகையில் இந்த அரசுக்கு நன்றி !
இந்த அரசு தான் எங்களுக்குப் போராடக்கற்று கொடுத்தது.
மறு  வகையில் இந்த அரசுக்கு நன்றி !
இந்த அரசு தான் எங்களுக்குக் களத்தை தந்தது.
இன்னும் ஒரு வகையில் இந்த அரசுக்கு நன்றி !
இந்த அரசு தான் மக்கள் மன்றத்தின் வலிமையை சொன்னது.
இன்னும் ஒரு வகையிலும் இந்த அரசுக்கு நன்றி !
இந்த அரசு தான் ஒரு விரல் புரட்சிப் பற்றி எங்களை பேச வைத்தது.
இனியேனும்திருந்துங்கள் !
மனம் போனப்போக்கில்  பேசித்தீர்கள் ! திருத்துங்கள் !
இல்லையேல்  திருந்தப்படுவீர்கள் !



இரா காஜா பந்தா நவாஸ்
[email protected]