செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2020 (17:51 IST)

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு!

ஒரு பக்கமா அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அரசின் பணிகளை முதல்வர் ஈபிஎஸ் சிரத்தையாக கவனித்து வருகிறார் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் அவர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்க அவர் ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது
 
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது மற்றும் பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆளுநரிடம் முதல்வர் ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கு பல்கலைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த பிரச்சினை குறித்து அவர் ஆளுநரிடம் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது 
 
சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு சில மணிநேரங்கள் நடக்கும் என்றும் இந்த சந்திப்பு முடிந்ததும் செய்தியாளர்களை முதல்வர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது