1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (11:10 IST)

வரியை உயர்த்தியதோடு அபராதமும் வசூலிப்பதா? திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..

வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகையையும் வசூலிக்கத் துடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது திமுக அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும், மேலும், தமிழகம் முழுவதும் பொதுமக்களை ஒன்று திரட்டி திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார்.
 
Edited by Siva