1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (15:12 IST)

ராஜேந்திர பாலாஜியை துரத்தும் திமுக!? – எடப்பாடியார் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் பதவியில் இருந்தபோது தமிழக அரசின் பொது நிறுவனமான ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.2 கோடி மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடைய 4 பேரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கைது நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில் திமுக அரசின் காவல்துறை அவரை கைது செய்ய துடிப்பதையும், அவரது உறவினர்களுக்கு தொல்லை கொடுப்பதையும் வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.