திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 டிசம்பர் 2020 (15:02 IST)

ஆ ராசா விவாதத்திற்கு கூப்பிட்டா நான் போகணுமா? – எடப்பாடியார் ஆவேசம்!

அதிமுக குறித்து திமுகவின் ஆ.ராசா தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அவர் விவாதத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்து சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை பார்வையிட்டார்.

பிறகு வேளாண் மசோதா குறித்து பேசிய அவர் “விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் என்பதாலேயே வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. மற்ற மாநிலங்களில் இடைத்தரகர்கள் அதிகமாக இருப்பதால் அதை அகற்ற மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. விருப்பப்பட்டால் மட்டுமே விவசாயிகள் வேளாண் சட்டத்தை பயன்படுத்தலாம்” என கூறியுள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கு பற்றி ஆ.ராசா பேசி வருவது குறித்து பேசிய முதல்வர் “ஆ.ராசா விவாதத்திற்கு அழைத்தால் நான் போக வேண்டுமா என்ன? சாதாரண ஆள் அவர்” என்று கூறியுள்ளார்.