வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 மே 2019 (09:12 IST)

ஆட்சி கவிழும் சூழல் – சசிகலாவிடம் தூதுபோன எடப்பாடி மனைவி !

தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் அதிமுக தலைமை பதற்றமடைந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.  இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய அந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் ஆட்சி பறிபொகும் சூழலில் அதிமுக அரசு உள்ளது. இதனால் நிலைமையை சமாளிக்க நினைத்த எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார். அமமுக திமுகவோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் என அமமுக தெரிவித்துள்ள நிலையில் சசிகலாவிடம் சமாதானம் பேச தனது மனைவியை பெங்களூர் சிறைக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல எடப்பாடி மனைவியும் கடந்த வாரத்தில் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. அதேப்போல துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் மனைவியும் சசிகலாவை சந்தித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.