1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (11:51 IST)

அமலாக்கத்துறையினர் தலைமை செயலகத்திற்கு வருகிறார்களா? ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு..!

TN assembly
அமலாக்கத்துறை அதிகாரிகள் தலைமை செயலகத்திற்கு வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததை அடுத்து தலைமை செயலகத்தில் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, ஏவ வேலு மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்  சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில்  மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் நீர்வளத் துறை தலைமை  பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் படையுடன் சாஸ்திரிபவனிலிருந்து புறப்பட்ட நிலையில் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தான் வருகிறார்கள் என்று ஒரு தகவல் பரவியது. ஆனால் அவர்கள் பிராட்வே பக்கம் சென்று நகைக்கடை அதிபர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Mahendran