வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (17:11 IST)

சென்னையின் பல இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு.. பிரபல நகைக்கடைகளில் சோதனை..!

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவல் படி சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள மொத்த நகைக்கடை விற்பனை நிலையங்கள் முதலீட்டு நிறுவனங்கள் உட்பட ஏழு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி ஹங்கித் என்பவருக்கு சொந்தமான மொத்த நகைகள் விற்பனை நிறுவனம் மற்றும் வெங்கடேஸ்வரா நகை கடை, பூக்கடை என் எஸ் சி போஸ் சாலையில் உள்ள நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தெரிகிறது.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை முடிந்த பின்னர் சோதனையின் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran