1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2024 (11:39 IST)

பணியில் மோதல்.. விஏஓவை அலுவலகத்தில் பூட்டி வைத்த உதவியாளர்.. பெரும் பரபரப்பு..!

பணியில் ஏற்பட்ட மோதல் காரணமாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வி.ஏ.ஓவை, அவரது அலுவலகத்தில் அவரது உதவியாளரே பூட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வடக்கனந்தல் மேற்கு கிராமத்தில் தமிழரசி என்பவர் விஏஓ ஆக பணியாற்றி வரும் நிலையில், அவரது உதவியாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தமிழரசி மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் இடையே பணியின் போது மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, தமிழரசியை அலுவலகத்தில் உள்ளே வைத்து பூட்டி சங்கீதா சென்றார்.

அப்போது கதவை திறந்து விடு இல்லையென்றால் தாசில்தாரிடம் சொல்லி நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழரசி எச்சரிக்கை செய்ததாகவும், "உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்" என்று சங்கீதா அங்கிருந்து சென்று விட்டதாகவும் தெரிகிறது.

இது குறித்து தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தாசில்தார் பூட்டை திறந்து தமிழரசியை விடுவித்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், சங்கீதா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஏஓ அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.



Edited by Mahendran