வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (11:54 IST)

துர்கா ஸ்டாலினின் சகோதரி சாருமதி இன்று காலமானார்

sarumathi
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் உடன்பிறந்த சகோதரி சாருமதி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

தமிழ் நாடு முதல்வர் முக. ஸ்டாலின் மனைவியனுக்கு சாருமதி, ஜெயந்தி ஆகிய இரண்டு சகோதரிகளும், ராஜமூர்த்தி என்ற சகோதரரும் உள்ளனர்.

துர்கா ஸ்டாலின் வெளியூர் கோவில்களுக்குச் செல்லும்போது, தன் சகோதரிகளில் யாரையாவது ஒருவரை உடன் அழைத்துச் செல்வார்.

சாருமதி கோவையில் திருமணம்  முடித்துக் கொடுப்பட்ட நிலையில், அவரது கணவர் தொழிலதிபர் என்பதால், சென்னையில் குடிபெயர்ந்து விட்டனர்.

இந்த நிலையில், சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த சாருமதி  நேற்று நள்ளிரவில் காலமானார்.

இதையடுத்து, முதல்வர் முக. ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.