செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (09:24 IST)

மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: துரைமுருகன்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை கட்டுவது குறித்த பிரச்சனை ஏற்பட்டு வருகிறது
 
மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக மாநிலமும் கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழகமும் கூறி வருகின்ற நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக மாநிலம் நிதி ஒதுக்கியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் கூறியிருப்பதாவது:
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது