1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. பரபரப்பு சம்பவம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (11:46 IST)

வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் - பிரச்சார கூட்டத்தில் துரைமுருகன் சர்ச்சை!

திமுகவுக்கு வாக்களிக்காவிட்டால் 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி புறக்கணிக்கப்படும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் சர்ச்சை பேச்சு. 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் வாணியம்பாடி நகராட்சியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பின்வருமாறு பேசினார், தமிழக அரசின் திட்டங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டும்என்றால் திமுகவை ஆதரிக்க வேண்டும்.
 
வாணியம்பாடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் திமுக உறுப்பினர்களை தேர்வு செய்தால் வாணியம்பாடி நகராட்சி சிறப்படையும். இல்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வாணியம்பாடி நகராட்சி புறக்கணிப்படும். ஆளும் திமுக கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அனைத்து நன்மையும் நடக்கும் என பேசினார். 
 
மக்களை மிரட்டும் தொனியில் அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.