1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (20:51 IST)

மேகதாது அணை கட்டுவதை தடுக்க எந்த தியாகமும் செய்யத் தயார்: அன்புமணி ராமதாஸ்

கடந்த சில நாட்களாக மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மேகதாது அணை கட்டுவதற்காக ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக கர்நாடக அரசு அறிவித்ததை அடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க எந்த தியாகமும் செய்ய தயார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டுவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிரானது என்றும் அவர் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளார் முற்றுப்புள்ளி