தொடர்புடைய செய்திகள்
- ரஜினி அரசியலுக்கு வந்தாலும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி: வளர்மதி
- தமிழிலும் ரயில்வே தேர்வு எழுதலாம்: மீண்டும் திமுகவுக்கு கிடைத்த வெற்றி!
- களையெடுப்பு எல்லாம் வெறும் கப்சாவா? உதயநிதியை நோக்கி பாயும் தோட்டா!
- ”அதிமுகவை விமர்சனம் செய்ய திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை”.. ஹெச்.ராஜா ஆவேசம்
- ”எதற்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”..ஜெயகுமாருக்கு பதிலடி கொடுத்த கனிமொழி
திமுகவினரே தமிழில் பெயர் வைப்பதில்லை – துரைமுருகன் ஆதங்கம் !
திமுக வின் பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திமுகவினரே இப்போது தமிழில் பெயர் வைப்பதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய துரைமுருகன் ’இந்தியைக் கற்றுகொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தாய் மொழியான தமிழின் அதிகப்பற்று வேண்டும். இப்போது யாரும் தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில்லை. இதில் திமுகவினரும் அடக்கம். திமுக காரர் ஒருவரிடம் பேத்தியின் பெயரைக் கேட்டேன். அவர் அனிஜா என்கிறார். இன்னொருவர் அஸ்வின் என்கிறார். இப்படி திமுகவினரே தமிழில் பெயர் சூட்டாத சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்
